இனி இதை செய்தால் போதும்.... ஸ்ட்ரெசுக்கு குட் பைதான்!! - Seithipunal
Seithipunal


இப்போதெல்லாம் யாரிடமாவது என்னப்பா ஒரு மாதிரியா இருக்க என்று கேட்டால், ஒரே ஸ்ட்ரெசுப்பா!  என்று சட்டென பதில் வருகிறது. அந்த அளவிற்கு இந்த வார்த்தை சிறியவர் முதல் பெரியவர் வரை பரிச்சயம் ஆகிவிட்டது. 

காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு-என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!

என்ற பாரதியின் வரிகளை குழந்தைகளுக்கு போதிக்காததன்  விளைவே இன்று குழந்தைகள் வரை ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்த நோய் ஏற்பட காரணமாக இருக்கிறது. 

வீட்டுப்பாடங்களை முடிக்கவே நேரம் சரியாக்க இருக்கும் போது, பெற்றோர்கள் தங்களின் ஆசைகளை குழந்தைகள்  மீது திணித்து பல்வேறு  பயிற்சி வகுப்புகளில் சேர்த்து விடுகின்றனர். 

இது போன்ற வகுப்புகள் குழந்தைகளின் விளையாடும் நேரத்தை திருடி விடுகின்றன.  இது அவர்களை இறுக்கமான மனநிலைக்கு தள்ளிவிடுகிறது. 

இது ஒருபுறம் இருக்க, வேலை செய்யும் இடங்களில் பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம் தான் என்றாலும், வொர்க் பிரம் ஹோம் முறை வந்ததிலிருந்து 8 மணி நேர வேலை என்பது நீண்டு 12 மணி வரை செல்கிறது. இயற்கை சூழல் அற்ற நிலையில் எப்போதும் ஒரே அறையில் இருப்பது மனதை குழப்பமான நிலைக்கு தள்ளிவிடுகிறது. 

மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது நம்மில் சிலர் ஏதாவது சாப்பிடவேண்டும் என்று நிறைய சாப்பிடுவார்கள். அதிலும் பெரும்பாலும் அது ஜங்க் புட் ஆகத்தான் இருக்கும். 

ஏன் இப்படி சாப்பிடுகிறார்கள் என்று மருத்துவரை கேட்டால், மன அழுத்தம் இருக்கும் போது உடலில் கார்டிசோல் என்னும் ஹார்மோன் உற்பத்தி வழக்கத்தை விடகூடுதலாக  சுரக்கும். இந்த கார்டிசோல் சுரப்பு அதிகமாகும்போது நொறுக்குத் தீனி அல்லது சுவையாக சாப்பிட வேண்டும் என்கிற எண்ணமும் உண்டாகும். தேவையற்ற மன அழுத்தமே உடலின் ஆரோக்கியத்திற்கு எதிராக அமைந்து விடுகிறது என்று கூறுகிறார்கள்,

இயல்பான சிந்தனை மாறி உணர்ச்சி வசப்படும்போது மூளையில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களை சமாளிக்க இதுபோன்ற விஷயங்களில் பெரும்பலம் ஈடுபடுவார்கள். 

தேவையில்லாத நொறுக்குத் தீனி, மன அழுத்தத்தால் ஏற்படும் உணவு முறை மாற்றம்  போன்றவற்றில் இருந்து விடுபட வேண்டுமென்றால் உங்களுக்கென ஒரு புட் லிஸ்ட்டை  தயார் செய்வது அவசியம். லிஸ்டை தயார் செய்வதோடு விட்டுவிடாமல், அவற்றை உறுதியாக பின்பற்ற வேண்டும். 

அட்டவணையில்  உள்ள நேரத்தை தவிர மற்ற நேரங்களில்  எதையும் சாப்பிடக் கூடாது. சரி! எப்படி மன  அழுத்தத்தை குறைப்பது? 


சரிவிகித உணவுகளை உண்பது, ஆழமான சுவாச பயிற்சி, நமக்கு பிடித்த இசை கேட்பது, சூரிய ஒளியில் சில நிமிடங்கள் இருப்பது, 

உள்ளங்கை கட்டை விரலின் கீழ் மென்மையான அழுத்தம் கொடுப்பது, 100 லிருந்து தலைகீழாக எண்ணுவது, கண்களை மூடி சில நிமிடம் இருப்பது போன்றவை நல்ல பலன்களை தரும். 

இயந்திரமையமாகவும் வேகமாகவும் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையை சற்று நின்று நிதானமாக யோசித்து நம் முன்னோர்கள் வகுத்துக்கொடுத்துள்ள வாழ்வியல் முறைகளை பின்பற்றினாலே சமீப காலமாக நம்மை தொற்றிக்கொண்டுள்ள 'ஸ்ட்ரெஸ்' என்ற வார்த்தையை அகராதியில் இருந்தே அப்புறப்படுத்தி விடலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hoe To Deal Stress


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->