குழந்தைகளுக்கு பிடித்த ஈசி கிட்ஸ் பாஸ்தா...! பாக்கலாமா...?
easy kids pasta cooking
ஈசி கிட்ஸ் பாஸ்தா
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
பாஸ்தா 2 கப்
காரட், பட்டாணி,
சோளம், ப்ரோக்கலி 1 /2 கப்
பூண்டு 2 பல்
மிளகு தூள் 1 டீஸ்பூன்
பால் 4 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய்
மற்றும் பட்டர் 2 டீஸ்பூன்
ட்ரைட் பார்ஸ்லி, ரோஸ்மேரி,
தைம், ஒரிகனோ 1 /4 டீஸ்பூன்
சீஸ் 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை :
பூண்டு, காரட், ப்ரோக்கலி ஆகிய அனைத்தையும் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதில் உப்பு சேர்த்து, நன்கு கொதித்ததும், அதில் பாஸ்தா சேர்த்து 15 நிமிடம் வரை வேக வைக்கவும். வெந்ததும் தண்ணீரை வடிக்கட்டி, பாஸ்தா மீது சிறிதளவு எண்ணெயை தௌpத்து ஆற விடவும்.பிறகு வாணலியில் எண்ணெய் அல்லது பட்டர் ஊற்றி சூடானதும் ,பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், காய்கறிகள் சேர்த்து வதக்கி, அதனுடன் பால் சேர்த்து ட்ரைட் பார்ஸ்லி, ரோஸ்மேரி, தைம், ஒரிகனோ, மிளகு தூள், உப்பு ஆகியவற்றுடன் வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து கிளறி மேலே சீஸ்ஸை தூவி பரிமாறவும். சுவையான கிட்ஸ் பாஸ்தா ரெடி.