காலையில் எழுந்ததும், சுழலும் மின்விசிறியை தப்பி, தவறி கூட பார்த்துடாதீங்க.! அவ்ளோ தான்.! - Seithipunal
Seithipunal


சில உளவியல் உண்மைகள் கேட்பதற்கும், படிப்பதற்கும் மிகவும் சுவாரஸ்யமாக நிறைந்ததாக இருக்கும்.. அவற்றுள் சில வாழ்க்கைக்கு ஒத்து போக கூடியதாகவும் இருக்கும். உதாரணத்திற்க்கு வலது புறம் படுத்தால் விரைவில் தூக்கம் வந்துவிடும், எதிர்பாலினத்திடம் பேசும் போது மனோபலம் அதிககிரிக்கும். இது போன்று விளையாட்டான அதே நேரம் உண்மை உள்ள சில உளவியல் உண்மைகள் உங்களுக்காக.

ஆய்வின் படி, எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பு கட்டுப்பாடு அதிகபட்சமாக நான்கு மாதங்கள் வரை மட்டுமே தாக்கு பிடிக்கும். அது மீறினாலே காதல் வயப்படுவார்கள். அதற்கு மேல் கண்ட்ரோல் செய்ய முடியாதாம். அடுத்து சம்பந்தப்பட்ட அந்த பெண்ணிடமோ அல்லது ஆணிடமோ சொல்லி விடுவார்களாம். (ஆனால் 90ஸ் கிட்ஸ் இந்த விஷயத்தில் விதிவிலக்கு உடையவர்களோ?)

ஒரு பெண்ணுடன் பழகும் போது அவர்களது கண்ணை பார்த்து பேசினால் மட்டுமே கண்ணியம் என்பாரகள். அது சரியே, ஆனால் அதில் பாதி உண்மை தான் உள்ளது. மனதிற்கு பிடித்துவிட்டது என்றால் குறிப்பிட்ட நபர் மீது, மனது நான்கே நிமிடத்தில் காதல் வயப்படும் என்கிறது ஆய்வு. அலுவலகம் அல்லது படுக்கையறையில் நீலநிற சூழலை ஏற்படுத்துவது மனதை சாந்தப்படுத்தும். நீல நிற அறையில் பணிபுரிந்தால் அவர்களுக்கு அதிக படைப்பாற்றல் திறன் உருவாகுமாம்.

காலையில் எழுந்தவுடன் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறியை பார்க்க வேண்டாம். ஏனெனில் அன்று முழுவதும் நம் எண்ணங்கள், எந்த முடிவையும் எடுக்க விடாமல் நம்மை குழப்பத்திலே வைத்திருக்குமாம். எழுந்தவுடன் நாம் வெள்ளை நிறத்தை பார்க்கும் போது, நம் எண்ணங்களும் சிந்தனைகளும் அமைதியாக, பதற்ற பட வேண்டிய சூழல் இருந்தால் கூட மனதை சாந்த நிலைக்கு கொண்டுவரும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.

பப்பிள் கம்கள் அல்லது சிவிங்கம் மன அழுத்தத்தை போக்க கூடிய ஒன்று என உளவியலாளர்கள் கூறுகின்றனர். ஒருவர் நம்மை எழுப்பி விழித்து கொள்வதற்கும் அலாரம் வைத்து விழித்து கொள்வதற்கும் வித்தியாசம் உண்டு. அலாரம் வைத்து எழும் போது, மன அழுத்தம் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. சில உளவியல் உண்மைகள் வேடிக்கையாக பார்க்கப்பட்டாலும் அவை தான் நிதர்சனம். வேண்டுமானால் மின்விசிறி உளவியலை முயற்சி செய்து பாருங்களேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dont look fan on early morning


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->