அதிகமா தண்ணீர் குடிச்சா.. இப்படிலாம் ஆபத்தா.?! - Seithipunal
Seithipunal


நீர் என்பது இந்த உலகில் தோன்றிய அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாத ஒன்று. தாகமெடுக்கும் போது நாம் அனைவரும் தண்ணீர் குடிப்போம். ஆனால் சில பேர் அதிக அளவு தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பார்கள். இவ்வாறு தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால் நம் உடலுக்கு பல்வேறு விதமான தீங்குகள் ஏற்படுகின்றன. அவை என்ன? என்று பார்க்கலாம்.

தேவைக்கு அதிகமான அளவு நீரை குடிப்பதால் நம் உடலில் உப்பின் அளவு குறைந்து தலைவலி, மயக்கம், குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படும்.

தண்ணீரை அதிகமாக குடிக்கும் போது அதன் காரணமாக உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பில் சீரற்ற தன்மை ஏற்படக்கூடும்.

தண்ணீர் அதிகமாக குடிப்பதன் காரணமாக சிறுநீரகத்தின் வேலை  அதிகரிக்கிறது. இது சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதற்கும் ஒரு காரணியாக அமைகிறது.

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதன் காரணமாக உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் அளவு குறைய துவங்கும். இதன் காரணமாக தசை நார் பிடிப்பு  உடல் வலி போன்ற உபாதைகள் ஏற்படும் .

அதிகப்படியான தண்ணீர் குடிப்பதன் காரணமாக நம் உடலில் இருக்கக்கூடிய செல்களில் நீர் பரவல் செயல்முறை காரணமாக செல்களுக்குள் நீர் புகுந்து அவை வீங்கிவிடும். இது நமது மூளைக்கு மிகவும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

demerits of drinking excess of water


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->