பெண்களே... உங்க பிரச்சனைக்கு இது தீர்வாகக்கூட இருக்கலாம்..! - Seithipunal
Seithipunal


கர்ப்பிணி பெண்கள், மற்ற பெண்கள் என அனைவரும் தான் சாப்பிடும் உணவுகளின் மீது அதிக கவனம் கொள்ள வேண்டும். பாலூட்டும் தாய்மார்களும் எந்த வகையான உணவுகளை உண்ண வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.

சோயாபீன்ஸ் உயர்தர புரதம் அடங்கியது. இது மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் போன்றவைகளை குறைக்கிறது.

கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை 'மெலனின்" எனப்படும் நிறமிகளே.

கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுகின்றனர்.

பெண்களின் வயிற்று சதை குறைய சின்ன வெங்காயத்தை பசு நெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.

பப்பாளிக்காயைக் கூட்டு செய்து சாப்பிட்டால் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் அதிகமாக சுரக்கும்.

கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

womens health tips


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->