ஈஸியான டேஸ்டி வேர்க்கடலை புதினா சட்னி.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


அனைவருக்கும் பிடித்த ஈஸியான டேஸ்டி வேர்க்கடலை புதினா சட்னி சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்: 

வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்

புதினா - 1 கப்

கொத்தமல்லி - 1/2 கப் 

பச்சை மிளகாய் - 4

இஞ்சி - சிறிதளவு

புளி - சிறிதளவு

உளுந்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன் 

காய்ந்த மிளகாய் - 2 

தேங்காய் துருவல் - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

கடுகு -1/2 டீஸ்பூன்டீஸ்பூன்

செய்முறை:

•முதலில் புதினா, கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும். பின்பு கடாயை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொத்தமல்லி, புதினாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும்.

•இதையடுத்து மிக்சி ஜாரில் வதக்கிய கொத்தமல்லி, புதினா, வருத்த வேர்க்கடலை, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, புளி, உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். பிறகு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து அரைத்த சட்னியில் சேர்த்தால் சுவையான வேர்கடலை புதினா சட்னி ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasty easy Peanut mint chutney recipe


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->