கொரோனாவால் மாதவிடாய் மாற்றங்கள்.. மருத்துவர்கள் கூறுவது என்ன?..!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.. முதலில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கடுமையான அளவு கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட்டது. தற்போது பெரும்பாலான நாடுகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. 

இந்த வாழ்க்கைமுறை மாற்றத்தின் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், பெண்களுக்கு மனஅழுத்தம், மாதவிடாயில் பிரச்சனை, உத்திரப்போக்கில் பிரச்சனை, மாதவிடாய்க்கு முன்னான அறிகுறிகள் மற்றும் தசைப்பிடிப்பு போன்றவை ஏற்படும். 

இதனால் சரியான உணவுமுறைகள் மற்றும் மனதை அமைதியாக வைத்திக்கும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். வளர்ந்து வரும் நாடுகளில் கொரோனாவின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சூழல் காரணமாக, இந்த தாக்கத்தை பயன்படுத்தி உடலை நாம் பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டும் என்று யுனிசெப் தெரிவிக்கிறது.

இன்றுள்ள காலத்தில் பெண்கள் ஓய்வின்றி பணியாற்றி வரும் சூழலும், பெரும்பாலான நிறுவனங்களில் இரவு நேர பணிகளுக்கும் பெண்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், உடல்நலத்தில் எந்த விதமான முயற்சியும் மேற்கொள்ளாமல் பல உடலநலக்குறைவை ஏன் என்று தெரியாமேலேயே அனுபவித்து வந்தனர். 

இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள ஊரடங்கை பயன்படுத்தி சத்தான உணவுகள் மற்றும் காய்கறிகள், பழங்களை பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Periods or Menstruation tips


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->