பலா பழத்தில் பாயாசமா? இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்..! - Seithipunal
Seithipunal


பொதுவாக இனிப்பு பிரியர்களுக்கு பாயாசம் என்றால் மிகவும் பிடிக்கும். அவர்களுக்காக பலாபழத்தில் சுவையான பாயாசம் எப்படி செய்வது என பார்போம்.

தேவையானவை:

பலாப்பழம் - 20

தேங்காய் பால் - 2 கப்

வெல்லம் - 150 கிராம்

ஏலக்காய் - 6 (பொடி)

முந்திரி - தேவையான அளவு

பிஸ்தா - தேவையான அளவு

நெய் - தேவையான அளவு

செய்முறை:

பலாபழத்தில் கொட்டை நீக்கி நறுக்கி கொள்ளவும். பலாப்பழத்தை வேக வைத்து ஆற வைக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து வெல்லப் பாகை ஊற்றி நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் மசித்து வைத்த பலாப்பழ விழுதை போட்டு அதன்பின் ஏலத்தூள், தேங்காய் பால் ஊற்றி ஒரு கொதிக்க விடுங்கள்

அதன் பின்னர், நெய்யில் வறுத்த முந்திரி, பிஸ்தா, பொடியாக நறுக்கிய பலாப்பழத்தை போட்டு இறுதியில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து இறக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pala Payasam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->