குட்டீஸை சுண்டி இழுக்கும்., சத்தான முட்டை சேமியா.! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

சேமியா - 400 கிராம்,
வெங்காயம் - 3 எண்ணம்,
பச்சை மிளகாய் - தேவையான அளவு,
இஞ்சி & பூண்டு பேஸ்ட் - தேவையான அல்லது சிறிதளவு,
முட்டை - 4 எண்ணம்,
தக்காளி - 1 எண்ணம்.,
கொத்தமல்லி & கறிவேப்பில்லை - சிறிதளவு,
மஞ்சள் - தேவையான அளவு.

செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட சேமியாவை நன்றாக பொன்னிறத்தில் வறுத்தெடுத்து கொள்ளவும், பின்னர் எடுத்துக்கொண்ட காய்கறிகளை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். முட்டையை முதலிலேயே தனியாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

காய்கறிகளை நறுக்கிய பின்னர், வானெலியில் எண்ணையை விட்டு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நன்கு வதக்கி கொள்ளவும். வெங்காயம் வதங்கிய பின்னர் அதில் இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்டை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

பின்னர் அதில் (தேவை என்றால் சிறிதளவு கறிமசால் தூளை போடலாம்) மிளகாய் தூளை சிறிதளவு போட்டு, அதனை 30 நொடிகள் வதக்கிய பின்னர் 250 மி.லி தண்ணீரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

தண்ணீர் கொத்தித்தவுடன் அதில் வைத்திருந்த சேமியாவை போட்டு முதலில் வேக வைத்து விட்டு, பின்னர் வறுத்து வைத்திருந்த முட்டையை அதில் போட்டு கிளறவும். சுவையான முட்டை சேமியா தயார்.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare egg semiya at home


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->