முஸ்லிம் வீட்டு ஸ்டைலில்.. சூப்பரான சிக்கன் பிரியாணி.. இப்படி செய்து பாருங்கள்.!  - Seithipunal
Seithipunal


முஸ்லிம் வீடுகளில் செய்யப்படும் சூப்பரான சிக்கன் பிரியாணி எப்படி செய்வதென பார்க்கலாம்!

தேவையானப் பொருட்கள்:

சீரக சம்பா அரிசி - 1கிலோ
தண்ணீர் - 1 1/2 மடங்கு தண்ணீர்
சிக்கன் - 1 கிலோ
நெய் - 200 ml
வெங்காயம் - 400 கிராம்
இஞ்சி விழுது - 100 கிராம்
பூண்டு விழுது - 75 கிராம்
தக்காளி - 250 கிராம்
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
ஸ்டார் அனிஷ் பூ - 1
பிரிஞ்சி இலை - 1
புதினா - 1 பிடி
கொத்தமல்லி - 1 பிடி
பச்சை மிளகாய் - 5
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
தயிர் - 100 ml
எலுமிச்சைப் பழம் - 1

செய்முறை:

அரிசியை நன்றாக கழுவி  1 மணிநேரம் தண்ணீரில் ஊற விடவும்.

அடுப்பில் அகலமான பாத்திரம் வைத்து நெய் ஊற்றி உறுகியதும் பட்டை கிராம்பு ஏலக்காய் ஸ்டார் அன்னாசி பூ, பிரிஞ்சி இலை சேர்க்கவும்.

இவையெல்லாம் பொறிந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் நன்றாக மொறுகும் அளவிற்கு வதக்கவும். எந்த அளவிற்கு வெங்காயம் மொறுகி  இருக்கிறதோ அந்த அளவுக்கு பிரியாணிக்கு கலர் கிடைக்கும்.

பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை மணம் போகும் வரை வதக்கவும்.

பிறகு கொத்தமல்லி புதினா இலைகளை பச்சை மிளகாய் தயிர்  சேர்த்து கிளறவும்.

அடுத்து நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கிய பின் சிக்கனைப் சேர்த்து 
உப்பு, மிளகாய்த்தூளை போடவும். சிறிது மல்லிதூள் கூட தேவை என்றால் சேர்த்து சிக்கன் சற்று வெள்ளையாக தெரியும் வரை கிளரவும் .

பின்பு அரிசிக்கு தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும். ஒரு எழுமிச்சை பழத்தின் சாறை சேர்க்கவும். எண்ணெய் வெளியிடும் வரை நன்றாக கொதித்தப்பின் உப்பு காரம் எல்லாம் சரிப்பார்த்து தேவைப்பட்டால் சேர்த்துக் கொண்டு அரிசியை சேர்க்கவும்.

அரிசி நல்ல பதத்தில் வெந்தப்பிறகு பாத்திரத்தை நன்றாக மூடி மேலே ஒரு பாத்திரத்தில் நன்றாக கொதிக்கும் தண்ணீரை நிரப்பி ஆவி வெளியேறாத அளவுக்கு எடையுடன் வைக்க வேண்டும். 

இதுப்‌போன்று பத்து நிமிடம் தம்மில் இருந்தால் முஸ்லிம் ஸ்டைல் சிக்கன் பிரியாணி ரெடி.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make muslim style chicken biryani


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->