என்னது தயிர் சட்னியா? அசத்தல் சுவையில் இப்படி செய்து கொடுத்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்..! - Seithipunal
Seithipunal


தயிரில் பச்சடி, மோர் குழம்பு , சாதம் என பல வகை செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால், தயிரில் சுவையான சட்னி எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம்.

தேவையானவை :

தயிர் - 1/2 கப்

பெரிய வெங்காயம் - 1

கடுகு - 1 tsp

எண்ணெய் - 1 tbsp

உப்பு - தே.அ

மிளகாய் தூள் - 1 tsp

தனியா தூள் - 2 tsp

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 tsp

கரம் மசாலா தூள் - 1/2 tsp

செய்முறை :

பிரெஷ் தயிரை கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளுங்கள். அதில், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கோள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து அதில் என்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டி தாளித்து கொள்ளுங்கள்.

அதனுடன் பூண்டு, இஞ்சி விழுது சேர்த்து வதக்குங்கள். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வெந்ததும், தயிரை ஊற்றி கிளறுங்கள்.  கெட்டி பதம் வரும் வரை கரைத்து கொள்ளவும்.  கெட்டியானதும் கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் சட்னி தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make Curd chutney


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->