முடி உதிர்தல் இருக்குறதா??..!! நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்...!! - Seithipunal
Seithipunal


முடி கொட்டுதல் பலரை கவலையடைய செய்யும். அப்படி முடி கொட்டுதலை சில உணவு வகைகளை சாப்பிடுவதன் மூலம் குறைக்கலாம்.

கரிசலாங்கண்ணிக்கீரை, வெந்தயக்கீரை, மணத்ததக்காளி கீரை, தக்காளி கீரை, வல்லாரை கீரை நெல்லிக்காய் சின்ன வெங்காயம் போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்து கொண்டால் தலைமுடி செழித்து வளரும்.

பேரீச்சம் பழம், அத்திப்பழம் சாப்பிடுவது முடி வளர்ச்சிக்கு உதவும். தக்காளிப்பழம் மயிர்க்கால்களை உறுதிப்பெற செய்வதுடன் முடி கருமையடைய உதவும். உணவில் புளிப்பு அதிகம் சேர்த்தால் முடி வளர்ச்சி பாதிக்கப்படும்.

கம்பு, கேழ்வரகு, சோளம், பட்டாணி, போன்றவற்றில் சிலிக்கான் சத்து அதிகமாக உள்ளதால் அவை முடி வளர்ச்சிக்கு உதவும். வைட்டமின் ஏ சத்துள்ள காய்கறிகள், வைட்டமின் பி சத்து நிறைந்த பருப்பு வகைகள், வைட்டமின் சி சத்துள்ள பழங்களை சாப்பிடுவதும் நல்லது.

இப்படி உணவுவகைகளை சேர்த்து கொள்வதன் மூலம் முடி கொட்டுதலை குறைக்கும். இது மட்டுமின்றி சரியான உணவு வகைகளை எடுத்து கொள்வதால் நமது உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hairloss tips


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->