நாகர்கோவில் ஸ்பெஷல் கிண்ணத்தப்பம் இப்படி செஞ்சு பாருங்க! - Seithipunal
Seithipunal


கிண்ணத்தப்பம் என்பது  குமரி மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பலகாரமாகும்.  இந்தக் பலகாரத்தை  நாம் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி- 1\2  
தேங்காய் பால -2கப்
முட்டை - 1
சர்க்கரை- 1\2கப்
ஏலக்காய்த்தூள் - 1\4ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன் 

செய்முறை ;
முதலில் பச்சரிசியை நன்றாக கழுவி  நன்றாக மூழ்கும் அளவிற்கு  தண்ணீர் ஊற்றி  மூன்று மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அரிசி நன்றாக ஊறியவுடன்  அதனை மிக்ஸி ஜாரில் போட்டு  எடுத்து வைத்த தேங்காய்ப்பால்  சேர்த்து  நன்றாக வெண்ணெய் அளவுக்கு அரைத்துக் எடுத்து கொள்ள வேண்டும். மிக்ஸி  ஜாரில்  முட்டை மற்றும்  சீனி சேர்த்து நன்றாக அடித்து  எடுத்து  கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில்  அரிசி மற்றும் தேங்காய் பால்   விழுதுடன்  முட்டை மற்றும் சீனி கலவையை சேர்த்து  நன்றாக நீர்த்த பதம் வரும் வரை  கரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கேக் டின்னில் சிறிது எண்ணெய் தடவி  கால்வாசி அளவு  அவற்றில் இந்த கலவையை ஊற்றி அவற்றுடன் சிறிது சீரகம் மற்றும் ஏலக்காய் பவுடர் தூவி  இட்லி பாத்திரத்தின் உள்ளே உயரமான அளவுக்கு  வைத்து இட்லி தட்டை வைத்து 20 நிமிடம் அவித்து எடுத்தாள் சுவையான  கிண்ணத்தப்பம் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delicious steam rice cake receipe


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->