சுவையான 'சீஸ் ஆம்லெட்' ஒருமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.!  - Seithipunal
Seithipunal


சுவையான சீஸ் ஆம்லெட் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 
முட்டை 
வெங்காயம் 
தக்காளி 
பச்சை மிளகாய் 
சீஸ் 
மிளகு தூள் 
எண்ணெய் 
உப்பு 

செய்முறை: 
சீஸை நன்றாக துருவி எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் நன்றாக பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு, மிளகு தூள், வெட்டி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 

பிறகு ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கலக்கி வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்றாக வெந்தவுடன் மறுபுறம் திருப்பி போடவும். 

பின்னர் துருவி வைத்துள்ள சீஸை ஒரு பக்கமாக தூவி நன்றாக வேக வைத்து எடுத்தால் சுவையான சீஸ் ஆம்லெட் தயார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cheese omelet recipe in tamil


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->