நாவில் எச்சிலை ஊறவைக்கும் காலிபிளவர் ரோஸ்ட்.! சுவையாக செய்து அசத்துங்கள்.!
Cauliflower roast preparation
தேவையான பொருட்கள்:
காலிபிளவர் - சின்னப் பூ
மிளகு தூள் - அரை டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் _ 1/2 டீஸ்பூன்
கரம்மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
கடலை மாவு _ ஒரு டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு _ ஒரு டேபிள் ஸ்பூன்
சோள மாவு (விருப்பப்பட்டால் )
உப்பு தேவையான அளவு
பொறிக்க தேவையான எண்ணெய்.
செய்முறை:
காலிபிளவரை சின்ன சின்ன துண்டுகளாக்கி எடுத்துக் கொண்டு, சுத்தம் செய்து வெந்நீரில் உப்பு சேர்த்து அரை வேக்காடு வேக வைத்து வடிகட்டி ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
அதில் மேலே குறிப்பிட்டு உள்ள மசாலா பொருட்களை காலிபிளவரில் தூவிவிட்டு அதில் இருக்கும் ஈரப்பதத்துடன் நன்றாக பிசறி வைக்கவும்.
சரியாக ஒட்டாவிட்டால் சிறிது தண்ணீரை தெளித்து கலவை காலிபிளவரில் ஒன்றுமாறு செய்து எண்ணெயை காய வைத்து அதில் போட்டு பொறித்து எடுத்தால் சுவையான ரோஸ்ட் தயார்..!
English Summary
Cauliflower roast preparation