அன்னாசி பழ சாதம்.! பசியை தூண்டும் விருப்ப உணவு.!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

சாதம் - 1 கிண்ணம் (தேவையான அளவு)
அன்னாசிப்பழம்  - (சிறு துண்டுகளாக நறுக்கியது)1 கப்
வெங்காயம் - 1
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டு பல் - 3 அல்லது 4
கொத்துமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு
புதினாஒ - ரு கைப்பிடி
மிளகாய்த்தூள் - அரை டேபிள் ஸ்பூன்
மிளகு  - (கொரகொரப்பாகப் பொடித்தது)1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை : 

முதலில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்துமல்லி, புதினா ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.   அடி கனமான வாணலியை அடுப்பிலேற்றி எண்ணெய் விடவும்.

அதில் அன்னாசிப்பழத் துண்டுகளைப் போட்டு சில நிமிடங்கள் வதக்கவும்.

அத்துடன் இஞ்சி, பூண்டு துண்டுகளைச் சேர்த்து சில வினாடிகள் வதக்கியபின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.   பின்னர் கொத்துமல்லி, புதினா இலைகளைச் சேர்த்து சற்று வதக்கி, அதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும். 

அதில் 2 அல்லது 3 கை நீரைத் தௌpத்து மூடி வைத்து சிறு தீயில் சில வினாடிகள் வேக விடவும்.

பின்னர் மூடியைத் திறந்து, நீர் வற்றும் வரை கிளறி விடவும். 

அதில் சாதத்தைப் போட்டு, அதன் மேல் மிளகுத்தூளைத் தூவி, அடுப்பை சற்று பெரிய தீயில் வைத்து, ஓரிரு கிளறு கிளறி இறக்கி வைக்கவும். 

இறக்கி வைத்தப் பின் எலுமிச்சை சாறைச் சேர்த்து கிளறி, கொத்துமல்லி இலைத் தூவி பரிமாறவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

annachi fruit rice


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->