சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட தங்கை - ஆத்திரத்தில் அண்ணன் செய்த கொடூர சம்பவம்.! 
                                    
                                    
                                   young man arrested for kill sister in telungana
 
                                 
                               
                                
                                      
                                            சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட தங்கை - ஆத்திரத்தில் அண்ணன் செய்த கொடூர சம்பவம்.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உதவி செவிலியர் படிப்பை முடித்துவிட்டு அரசு மருத்துவமனையில் பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார். அந்த பெண் சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை பதிவிட்டுள்ளார். 

இதை கவனித்த அந்த பெண்ணின் அண்ணன் பலமுறை அந்த பெண்ணை எச்சரித்துள்ளார். இதனை கண்டுகொள்ளாமல் அந்த பெண் மேலும் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இது தொடர்பாக நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 
அப்போது அந்த பெண், "என் விருப்பப்படி தான் செய்வேன்" என்று அண்ணனிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் வீட்டில் இருந்த உலக்கையால் தங்கை எண்டு கூட பாராமல் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

இதில், படுகாயமடைந்த அந்த பெண்ணை அவரது குடும்ப உறுப்பினர்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் இளம்பெண்ணின் அண்ணன் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பேரும் பரபர[பய் ஏற்படுத்தியுள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       young man arrested for kill sister in telungana