சேலையில் மாஸாக வொர்க் அவுட் செய்யும் மாடர்ன் பெண்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


சமூக வலைதளங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதில் சில வேடிக்கையான, நெகிழ்வான வீடியோ மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருவது வழக்கம். 

அந்த வகையில் டெல்லியை சேர்ந்த ரீனா சென் என்ற இளம்பெண் புடவையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த பெண்ணுக்கு ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உடற்பயிற்சி செய்வதற்கு எந்த உடை வேண்டுமானாலும் அணிந்து உடற்பயிற்சி செய்யலாம் என்பதை நிரூபித்து காட்டுவதற்காக சேலையில் உடற்பயிற்சி செய்து வீடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது இது குறித்த வீடியோ நெட்டிசன்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women's saree workout video viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->