உத்தர பிரதேசம்: பிரயாக்ராஜ், கான்பூர் உள்பட பல நகரங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ், கான்பூர் உள்பட பல்வேறு நகரங்களில் கொசுக்களால் பரவ கூடிய டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன், பிரயாக்ராஜ் நகரில், ஒரு பள்ளி கூடத்தில் மாணவர்கள் பலர் டெங்கு பாதிப்புக்குள்ளான நிலையில், ஒரு நாள் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

மேலும் நகரின் பல பகுதிகளில் தொடர்ந்து பரவல் அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரயாக்ராஜ் தலைமை மருத்துவ அதிகாரி நானக் ஷரண், மாவட்டத்தில் டெங்குவை ஆய்வு செய்வதற்காக, பல பகுதிகளில் பூச்சி கொல்லிகள் தெளிக்கப்பட்டு கொசுக்கள் ஒழிக்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பிரயாக்ராஜ், கான்பூர், லகிம்பூர் கேரி மூடிட்டு பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெங்கு பாதிப்புகளை முன்னிட்டு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கடந்த சனிக்கிழமை உயர்மட்ட சீராய்வு கூட்டம் நடத்தினார்.

மேலும் இந்த கூட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பு பற்றி மாநில சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து டெங்குவுக்கு சிகிச்சை அளிக்க சுகாதார பணியாளர்கள் குழுவினர் குவிக்கப்பட்டும், மருந்துகள், அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Widespread increase in dengue cases in Uttar Pradesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->