உள்நாட்டு விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும்! வெங்கையா நாயுடு.! - Seithipunal
Seithipunal


விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய பல்கலைக் கழகங்களின் சார்பில் நடத்தப்படும் இரண்டாவது சீசன்  "கேலோ இந்தியா" விளையாட்டுப் போட்டிகளை நேற்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பெங்களூரில் தொடங்கி வைத்தார்.

துணை ஜனாதிபதி அவர்கள் கேலோ விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்வதற்காக கர்நாடக மாநிலத்திற்கு நன்றியினை தெரிவித்தார்.

அப்போது அவர், அனைத்து இளைஞர்களும் விளையாட்டினை வாழ்க்கையின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ள வேண்டும். விளையாட்டு இளைஞர்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் உறுதியாக இருக்க செய்யும் மற்றும் இளைஞர்கள் துரித உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் அரசு அளித்துவரும் ஊக்கத்தினால் உள்நாட்டு விளையாட்டுகளை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதற்கு இளைஞர்கள் அனைவரும் முன்வர வேண்டும், உள்நாட்டு விளையாட்டுகளையும் ஊக்குவிக்க வேண்டும். அதன் மூலம் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லலாம் என்றும் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vk naidu asks encouragement for domestic sports


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->