கோலாகலமாக கொண்டாடப்படும் வேட்டி தினம்.!
vetti day in january six
ஒவ்வொரு வருடமும் ஜனவரி 6 ஆம் தேதி வேட்டி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் பண்பாட்டு உடை மற்றும் தமிழரின் பரமப்பரிய உடைகளில் மிக முக்கியமானது வேட்டி. மனிதன் முதன் முதலாக சட்டை அணிவதற்கு முன்பு வேட்டியை தான் அணிந்தனர்.
முதன் முதலாக வேஷ்டி தினத்தை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநராக இருந்த சகாயம் ஐ. ஏ. எஸ். பொங்கலை ஒட்டி வேட்டிதினம் கொண்டாடுவோமே என்று ஆலோசனை வழங்கினார்.

இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி ஆறாம் நாள் வேட்டி விழாவாக ‘யுனெஸ்கோ’ அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 6 ஆம் நாள் பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் அலுவலகங்களில் வேட்டி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் வேட்டி கட்டிக்கொண்டு தங்களின் வேட்டி தினத்தைக் கொண்டாடினர்.
ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் இந்த வேட்டி நாள் தற்கால இளைஞர்களிடம் ஊக்குவிக்கும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இளைஞர்கள் வேட்டி அணியும்போது தனக்கென்று ஒரு கம்பீரத்தைக் கொண்டு வருகின்றனர்.