மாயமான வெற்றி துரைசாமி: குடும்பத்தினரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள்! - Seithipunal
Seithipunal


முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, இமாச்சலப் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற போது அவரது கார் விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சடலமாகவும் வெற்றியின் உதவியாளர் படுகாயத்துடனும் மீட்கப்பட்ட நிலையில் வெற்றி துரைசாமி காணவில்லை. 

இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெற்றி துரைசாமியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்த ரத்த கறைகள், திசுக்கள் சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் சைதை துரைசாமி மற்றும் அவரது மனைவியிடம் இன்று ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையின் முடிவில் விபத்து நடைபெற்ற இடத்தில் கிடைத்துள்ள ரத்த மாதிரிகள் யாருடையது என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vetri Duraisamy family members Blood samples collected


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->