தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 8 மாத கர்ப்பிணி மரணம்..! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசம் மாநிலத்தை சார்ந்த பள்ளி ஆசிரியை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு இருந்த நிலையில், அவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், அரசு அதிகாரிகளின் வற்புறுத்தலால் அவர் உயிரிழந்ததாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்பூர் பள்ளியா பகுதியை சார்ந்தவர் கல்யாணி அக்ஹரி (வயது 27). இவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் நிலையில், உத்திர பிரதேசம் மாநிலத்தில் நடைபெறவிருந்த பஞ்சாயத்து தேர்தல் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

அவர் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அரசு அதிகாரிகள் அவரை வலுக்கட்டாயப்படுத்தி தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி அவருக்கு உடல்நலம் மிகவும் குன்றியிருந்ததாகவும் கூறப்படுகிறது. 

கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தன்னை தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க கூறி கல்யாணி மனு அளித்திருந்த நிலையில், அவர் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்றும், இல்லையென்றால் ஊதியத்தை இரத்து செய்துவிடுவதாகவும் அதிகாரிகள் தரப்பில் மிரட்டி இருக்கின்றனர்.

இந்நிலையில், இறுதியாக கடுமையான உடலநல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட கல்யாணி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதியாகி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விஷயம் தொடர்பாக நீதிமன்ற விசாரணையும் நடந்து வருகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh Teacher Kalyani Agrahari Forced Election Duty she pregnant and died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->