ஒரே நேரத்தில் டபுள் சேலரி வாங்கிய ஆசிரியை... விசாரணையில் பகீர்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அறையா மாவட்டத்தின் தேஜல்புர் பகுதியில் துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கடந்த 2007 ஆம் வருடதம் முதல் பணியாற்றி வந்தனர் மீனா தேவி.

இவர் அங்குள்ள இடா மாவட்டத்தின் குவான்பூர் துவக்கப்பள்ளியில் கடந்த 2010 ஆம் வருடத்தின் ஆகஸ்ட் மாதம் வரை தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், இவர் இரண்டு மாவட்டத்திலும் ஒரேநேரத்தில் சம்பளம் பெற்று வந்தது கண்டறியப்பட்டுள்ளது. 

இரண்டு பள்ளியின் ஆசிரியர் பெயர், பெற்றோரின் பெயர் மற்றும் கல்வி சான்றிதழின் அடிப்படையில் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் இது உறுதியாகியுள்ளது. மேலும், ஆசிரியை மீனா தேவி மோசடியில் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதன்பின்னர், மீனா தேவியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்ததில், அவர் போலியான ஆசிரியர் என்பதும் உறுதி செய்யப்பட்ட நிலையில், மீனா தேவியின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மீனா தேவி பெற்ற சம்பள பணத்தை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh Teacher arrest by Police Complaint Cheating


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->