உ.பி. || 5 ஆண்டுகளில் 166 குற்றவாளிகள் சுட்டுக் கொலை..! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலத்தில் காவலர் நினைவுத் தினத்தை முன்னிட்டு பணியின் போது உயிரிழந்தவர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர் தெரிவித்ததாவது,

"நாட்டின் பாதுகாப்பைப் பேணுவதில் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நேரம் இது. 

உத்தரப் பிரதேச போலீஸ் நடத்திய என்கவுன்ட்டர்களில் கடந்த 5 ஆண்டில் 166 குற்றவாளிகள் கொலை செய்யப்பட்டனர். மேலும், 4,453 பேர் காயமடைந்தனர். காவலர்களின் குடும்ப நலன் மற்றும் அவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்து வருகிறது. 

இதையடுத்து உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து காவல்துறையில் 22,000 பெண்கள் உட்பட 1,50,231 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், 45,689 பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இதைத்தொடர்ந்து, ஆயுதப்படை காவலர்கள், தலைமை கான்ஸ்டபிள்கள் மற்றும் கான்ஸ்டபிள்களுக்கு தொலைபேசி உதவித் தொகையாக  ஆண்டுக்கு ரூ.2,000 கூடுதலாக வழங்கப்படும்" என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

uttar pradesh 166 accuest kill


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->