காவல்துறை பணியிடங்களுக்காக எழுதப்பட்ட தேர்வு திடீர் ரத்து: வெளியான அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் காவல்துறையில் உள்ள 60 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப எழுது தேர்வு நடத்தப்பட்டது. 

இந்த தேர்வை சுமார் 50 லட்சம் பேர் எழுதிய நிலையில் காவல்துறை பணியிடங்களுக்காக எழுதப்பட்ட தேர்வு ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

மேலும் தேர்வுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வினாத்தாள் கசிந்து பரவியதாக வெளியான புகாரின் அடிப்படையில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது குறித்து மாநில முதல் மாதிரி யோகி ஆதித்யநாத் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், போலீஸ் ரிசர்வ் சிவில் காவல் பணியிடங்களுக்காக எழுதப்பட்ட தேர்வு ரத்து செய்து அடுத்த 6 மாதத்திற்கு மறு தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

தேர்வுகளின் புனித தன்மையில் சமரசம் செய்ய முடியாது. இளைஞர்களின் உழைப்பில் விளையாடுபவர்கள் எந்த சூழ்நிலையிலும் தப்பிக்க மாட்டார்கள். இது போன்ற செயலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UP police posts written exam cancelled


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->