ரூ. 3 ஆயிரம் கோடியில் பாதாள புல்லட் ரெயில் நிலையம் அமைக்க கையெழுத்து.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையிலிருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத் வரை "புல்லட் ரெயில்" எனப்படும் அதிவேக ரெயில்களை இயக்க அரசு திட்டமிடப்பட்டது. இந்த ரெயில் நிலையம் மும்பை நகரில் உள்ள பாந்திரா குர்லா வளாகத்தில் பூமிக்கு அடியில் அமைக்கப்படுகிறது. 

இதுதான் புல்லட் ரெயில் நிலையத்தின் ஒரே பாதாள ரெயில் நிலையம் ஆகும். இந்த ரெயில் நிலையம் ரூ.3 ஆயிரத்து 681 கோடியில் பூமிக்கு அடியில் 24 மீட்டர் ஆழத்தில் 54 மாதங்களில் கட்டி முடிக்கப்படும். 

மூன்று தளங்கள் கொண்டதாக மைய உள்ள இந்த ரெயில் நிலையம், தலா 415 மீட்டர் நீளத்தில் ஆறு நடைேமடைகளுடன் அமைக்கப்படுகின்றது. இங்கு 16 பெட்டிகளை கொண்ட புல்லட் ரெயில்களை நிறுத்த முடியும்.

இருப்பினும் இந்த ரெயில் நிலையம் அமைப்பதற்கு பல முட்டுக்கட்டைகள் எழுந்தது. இதனை சமீபத்தில் மராட்டிய மாநில அரசு நீக்கியது. இந்நிலையில், புல்லட் ரெயில் திட்டத்தில் மகாராஷ்டிரா மாநில தரப்பில் முதலாவது ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

underground bullet railway station contract signed


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->