"மதுரை எய்ம்ஸ்" வருமா? வராதா?.. மோடியிடம் பேசியது என்ன..? பிரதமர் சந்திப்புக்கு பின் உதயநிதி விளக்கம்..!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது "பிரதமர் மோடியுடனான சந்திப்பு மிகவும் திருப்தியாக இருந்தது. 

பிரதமர் கடந்த முறை சென்னை வந்திருந்த பொழுது டெல்லி வந்தால் தன்னை சந்திக்குமாறு கூறியிருந்தார். அதனை ஏற்றுக் கொண்டு பிரதமர் மோடியை சந்தித்தேன். இந்த சந்திப்பின்போது பாரத பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தேன். 

மேலும் நீட் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் சட்ட போராட்டம் தொடரும் என பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளேன். தமிழக மக்களின் மனநிலையை பிரதமர் மோடிக்கு எடுத்துரைத்து நீட் விலக்கு கேட்ட பொழுது மோடி சில விளக்கங்களை என்னிடம் அளித்துள்ளார். அதற்கு நான் சட்ட போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளேன்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்படும் கேலோ இந்தியா போட்டியை தமிழ்நாட்டில் நடத்த வாய்ப்பு தருமாறு பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டேன். மேலும் மாவட்டம் தோறும் விளையாட்டு மைதானங்கள் அமைக்க நிதி ஒதுக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

அதற்கு அவர் விளையாட்டு மைதானங்களில் பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு நான் பதில் அளித்துள்ளேன். பிரதமர் மோடி முதலமைச்சராக இருந்த பொழுது பெற்ற அனுபவங்கள் குறித்து என்னிடம் பகிர்ந்து கொண்டார். மதுரை எய்ம்ஸ் குறித்து பிரதமர் மோடியிடம் எதுவும் பேசவில்லை. 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் கூறியது உண்மை என வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. எனவே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பிரதமர் மோடியிடம் நான் எதுவும் பேசவில்லை" என செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanidhi said we didnot talk about Madurai AIIMS after PM meeting


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->