நவி மும்பை : ரூ.10 கோடி ஹவாலா பணத்துடன் தப்பி சென்ற இருவர் கைது.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவிமும்பை உரன் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் தன்னிடம் முதலீடு செய்தால் ஐம்பது நாளில் நாற்பது சதவீதம் வட்டி தருவதாக பொதுமக்களிடம் ஆசைவார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார்.

இதனை உண்மை என்று நம்பி ஏராளமானோர் லட்சக்கணக்கில் பணத்தை அவரிடம் இறைத்துள்ளனர். ஆனால் அவர் தெரிவித்தது படி, முதலீட்டாளர்களுக்கு வட்டி எதுவும் கொடுக்கவில்லை. இருப்பினும், ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்களும் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கவில்லை. 

இந்தநிலையில் சதீஷ் பொதுமக்களிடம் மோசடி செய்த பணத்துடன் தப்பி செல்வதற்குத் திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அந்த தகவலின் படி, போலீசார் காரில் தப்பித்துச் சென்ற சதீசை பிடித்தனர். 

இதையடுத்து போலீசார் காரை சோதனை செய்ததில் 10 டிராவல் பையில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். அதில் சுமார் ரூ.9 கோடியே 99 லட்சம் பணம் இருந்தது. 

இருப்பினும், சதீஷிடம் அந்த பணத்துக்கான ஆவணம் எதுவும் இல்லை. இதனால், போலீசார் சதீஷ் மற்றும் அவரது ஓட்டுநர் சசிகாந்தையும் கைது செய்தனர். மேலும், சதீசின் வங்கி கணக்கில் இருந்த ரூ.9 கோடியையும் முடக்கபட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples arrested for hawala money kidnape


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->