சட்டவிரோதமாக கட்டப்பட்ட திப்பு சுல்தான் நினைவிடம் இடிப்பு.!! - Seithipunal
Seithipunal


சட்டவிரோதமாக கட்டப்பட்ட திப்பு சுல்தான் நினைவிடம் இடிப்பு.!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள துலே நகரின் முக்கிய சாலை சந்திப்பில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்ட திப்பு சுல்தான் நினைவிடம் இடித்து அகற்றப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாள்களாக முகாலாய மன்னா் ஒளரங்கசீப், மைசூரு மன்னா் திப்பு சுல்தான் உள்ளிட்டோரை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் கருத்துகளால் ஹிந்து-முஸ்லிம் மதங்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் போராட்டங்களும் வன்முறையும் நடைபெற்றது.

இந்த நிலையில், துலே நகரில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி எம்எல்ஏ ஃபரூக் ஷா அன்வரால் கட்டப்பட்ட திப்பு சுல்தான் நினைவிடம் அகற்றப்பட்டுள்ளது. இந்த நினைவிடம் உள்ளாட்சி நிா்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டிருந்தது. 

இந்த சம்பவம் குறித்து எம்எல்ஏ தரப்பில், "நினைவிடம் இடிப்பது தொடா்பாக ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பிறகு அந்த நினைவிடத்தை தாங்களே அகற்றிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, அந்த நினைவிடம் தொடா்பாக துலே மாவட்ட ஆட்சியா் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

அந்த ஆலோசனைக்கு கூட்டத்தில், நகராட்சி நிா்வாகத்தின் மூலம் அந்த நினைவிடத்தை உடனடியாக இடித்து அகற்ற முடிவெடுக்கப்பட்டது. அதன் படி,  நினைவிடம் அமைந்துள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, சில மணி நேரத்திலேயே அந்த நினைவிடத்தை இடித்து அகற்றினா்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tippu sulthan memorial place demolition in maharastra


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->