₹2,000 நோட்டுக்கு அக்.7 வரை.. RBI கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக கடந்த மே 19ம் தேதி மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனால் மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ளவும் அவகாசம் வழங்கப்பட்டது.

மேலும் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தி இருந்தது. இதனால் கடந்த மே மாதம் முதல் பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்து அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொண்டு வந்தனர்.

ஒரு வாடிக்கையாளர் ஒரு சமயத்தில் அதிகபட்சம் 20,000 ரூபாய் வரை மட்டுமே அதாவது பத்து 2000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே வங்கிகளில் வரவு வைக்க முடியும் அல்லது மாற்ற முடியும் என ரிசர்வ் வங்கி தனது அறிவிப்பில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்தது. பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததன் அடிப்படையில் அக்டோபர் 7ம் தேதி வரை வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது வரை புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 96% திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Time extension till October 7 to exchange Rs2000 notes


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?
Seithipunal
-->