திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்.. நாளை முதல் ஆன்லைன் தரிசன டிக்கெட்கள்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் ரூ.300 தரிசன கட்டண சீட்டு மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் ஜனவரி 2-ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதன் காரணமாக வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் திருப்பதிக்கு சாமி தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 12-ம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி வரை சாமி தரிசனத்திற்கான ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் நாளை காலை தங்களுடைய அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடுகின்றனர். 

இதனை பக்தர்கள் www.tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தின் மூலம் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirupathi temple online ticket booking from tomorrow


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->