இரண்டு நாட்களில் வாய்க்கால் அடைப்பை நீக்கி சரி செய்ய வேண்டும்..பொதுப்பணித்துறைக்கு அதிமுக உரிமை மீட்பு குழு எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


உடனடியாக பொதுப்பணித்துறை திருவள்ளூர் சாலை முழுவதும் வாய்க்கால்களை அடைப்பை நீக்கி சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு நாட்களில் இந்த பிரச்சனையை சரி செய்யாவிட்டால் பொதுமக்கள் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர்திரு. ஓம் சக்தி சேகர் தெரிவித்துள்ளார்  .


நெல்லிதோப்பு சட்டமன்ற தொகுதி குயவர் பாளையம் அய்யனார் கோவில் தெருவில் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு சுகாதார சீர்கேடு இருப்பதை அப்பகுதி மக்கள் தொடர்ந்து பொதுப்பணித்துறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லாததால் மறியல் செய்ய முடிவு செய்து இது குறித்து அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர்திரு. ஓம் சக்தி சேகர் அவர்களிடம் முறையிட்டதை அடுத்து அப்பகுதிக்கு நேரடியாக சென்ற அதிமுக உரிமை மீட்பு குழு மாநில கழக செயலாளர் திரு. ஓம்சக்தி சேகர் அவர்கள் உடனடியாக பொதுப்பணித்துறை அமைச்சர் திரு லக்ஷ்மி நாராயணன் அவர்களை தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக பிரச்சனைகளை எடுத்துக் கூறினார் ,

மேலும் தண்ணீர் தொடர்ந்து தேங்கி இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவது குறித்தும் எடுத்துக் கூறினார். இதனை கேட்டு அறிந்த பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை நேரடியாக அனுப்பி பொதுப்பணித்துறை மூலம் வாய்க்கால்களை சரி செய்து தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை மேற்கொண்டார்.

உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருகை தந்து கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை அடுத்து பொதுமக்கள் நடத்த விருத்த போராட்டம் கைவிடப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் திரு ஓம் சக்தி சேகர் அவர்கள் பேசியது. புதுச்சேரி நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதி அய்யனார் கோவில் தெரு திருவள்ளுவர் சாலை புதுவையின் ஒரு பிரதான சாலை ஆகும். இந்த சாலையில் இரண்டு பக்கமும் உள்ள வாய்க்கால் நீண்ட காலமாக தூர்வரப்படாமல் அடைப்பு ஏற்பட்டு சிறு மழைக்கே தண்ணீர் தேங்கும் நிலை இருந்து வருகிறது. இது சம்பந்தமாக புது பணித்துறை அமைச்சர் மற்றும் தலைமை பொறியாளர் ஆகியோரை சந்தித்து மனு அளித்துள்ளேன். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல முடியாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம் உள்ளதால் மேலும் பிரச்சினை அதிகமாகும் சூழல் உள்ளது. எனவே உடனடியாக பொதுப்பணித்துறை திருவள்ளூர் சாலை முழுவதும் வாய்க்கால்களை அடைப்பை நீக்கி சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு நாட்களில் இந்த பிரச்சனையை சரி செய்யாவிட்டால் பொதுமக்கள் திரட்டி போராட்டம் நடத்தப்படும்.சங்கர் உடையார், வெங்கடேசன், லாரி முருகன், ஜெகதீசன்,ரமேஷ் ஆசாரி, சித்தா கணேசன், பிரபு, தம்பா, இளவரசு வேல்முருகன், ஜிப்மர் வாசு, முனிரத்தினம், ஆசாரி கணேசன், வரதராஜ்,அருள், நன்றி குமார் லாண்டரி குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The drainage blockage must be removed and repaired within two days The AIADMK recovery team warns the public works department


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->