தனி மேஜையால் வெடித்த சர்ச்சை - மும்பை ஐஐடி மாணவர்களுக்கு அபராதம்.!  - Seithipunal
Seithipunal


தனி மேஜையால் வெடித்த சர்ச்சை - மும்பை ஐஐடி மாணவர்களுக்கு அபராதம்.! 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் பவாய் ஐ.ஐ.டி. விடுதியில் சைவ மாணவர்கள் மட்டும் உட்கார வேண்டும் என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் அந்த வளாகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரம் ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள மூன்று விடுதிகளில் சைவம் சாப்பிடும் மாணவர்களுக்கு என்று தனியாக ஆறு மேஜைகள் ஒதுக்கப்பட்டது. இதைக் கண்டித்து மாணவர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதைத் தொடர்ந்து ஐஐடி நிர்வாகம் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தது. 

இது தொடர்பாக அம்பேத்கர் பெரியார் புலே வாசகர் வட்டம் எக்சில் வெளியிட்டசெய்திக்குறிப்பில், ஐ.ஐ.டி பாம்பே அதன் உணவு பிரித்தாளும் கொள்கைக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது என்றுத் தெரிவித்துள்ளது. 

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மாணவர் அமைப்பினர் கூறுகையில், "இந்த விவகாரம் குறித்து ஐ.ஐ.டி. நிர்வாகம் தரப்பில் நேரடியாக எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. ஆனால் ஐஐடி வளாகத்திற்குள் சாதிய பாகுபாடுகள் காட்டப்படுவதில்லை. உணவு பாரபட்சம் எதுவும் இல்லை என்பதாக தகவல்கள் சொல்லப்படுகிறது. 

சைவத்திற்கு தனி மேஜை ஒதுக்கப்பட்டுள்ள விவகாரம் பூதாகரமாக உருவெடுப்பதற்கு முன்பாக ஐஐடி நிர்வாகம் தரப்பில் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ten thousand fined to mumbai iit students


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->