கடன் வாங்கியதில் தமிழ்நாடு முதலிடம்.! 2 ஆண்டு திமுக ஆட்சியில் இத்தனை கோடியா.? - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தெலுங்கானா எம்பி ஒருவர் மாநிலங்கள் கடன் வாங்கியது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது எனவும், கடந்த மார்ச் மாதம் வரை தமிழகத்தின் கடன் தொகை ₹7,53,860 கோடியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தை தொடர்ந்து உத்தரபிரதேசம் 2வது இடத்திலும், மகாராஷ்டிரா 3ம் இடத்திலும் உள்ளது என பதில் அளித்துள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் தமிழகத்தின் கடன் ₹7,53,860 கோடியாக உயர்ந்துள்ளது. 

கடந்த அதிமுக ஆட்சியின் 2020-2021 நிதியாண்டில் தமிழக அரசின் கடன் தொகை ₹4,56,000 கோடியாக இருந்தது. அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ₹2,97,860 கோடி கடன் பெற்றுள்ளது. இது கிட்டத்தட்ட ₹3,00,000 கோடி ஆகும்.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழக அரசு ₹3,53,561 கோடி மட்டுமே கடன் வாங்கிய நிலையில் திமுக ஆட்சிக்கு பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சி நிறைவடைய இன்னும் 3 ஆண்டு உள்ள நிலையில் தமிழக அரசின் கடன் தொகை கிட்டத்தட்ட ₹10,00,000 கோடிக்கு மேல் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TamilNadu govt is the first in borrow loans


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->