முக்கனி பரிசளித்த தமிழக விவசாயிகள்!!! சத்தீஸ்கர் முதல்வருக்கு ஏன் பாராட்டு தெரிவித்தனர்?
Tamil Nadu farmers who gifted Mukani and praise the Chhattisgarh Chief Minister
பா.ஜ.க கட்சியை சேர்ந்த சத்தீஸ்கர் மாநில முதல்வரான விஷ்ணு தியோ சாய், தனது தேர்தல் வாக்குறுதியில், ஆட்சிக்கு வந்தவுடன், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,100 கொள்முதல் விலை விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
அவ்வகையில், தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானதால் விஷ்ணு தியோ சாய் நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.3,100 கொள்முதல் விலையாக விவசாயிகளுக்கு வழங்கினார். இதனால், சத்தீஸ்கர் மாநிலம் இந்த ஆண்டு மட்டும் 1.50 கோடி லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு புதிய வரலாறு படைத்தது.

விவசாய பிரதிநிதிகள்:
தமிழ்நாடு காவிரி சமவெளி மாவட்ட விவசாய பிரதிநிதிகளான, தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன் தலைமையில், தஞ்சை, நாகை, திருவாரூர், விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் சேரன், கும்பகோணம் வட்ட தலைவர் ஆதி கலியபெருமாள், இயற்கை வேளாண் விவசாயி சாமிநாதன், திருப்பந்துருத்தி சுகுமாரன், நாகை மாவட்டம் பாலாஜி, திருவாரூர் மாவட்டம் செங்குட்டுவன், விழுப்புரம் மாவட்டம் சீதாராமன், பாலாஜி உள்ளிட்ட ஒன்பது விவசாய சங்க பிரதிநிதிகள், சத்தீஸ்கர் மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாயை நேரில் சந்தித்து மா,பலா, வாழை ஆகிய முக்கனிகளையும் பரிசாக வழங்கினார்கள்.
மேலும் அதனுடன் தென்னங்கன்றுகளையம் நெல் மாலையையும் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது,"சத்தீஸ்கர் முதல்வரின் அறிவிப்பு இந்தியாவிலேயே முன்மாதிரியானது.இந்த அறிவிப்பினால் அம்மாநிலத்தில் நெல் உற்பத்தி அதிக அளவில் 2024- 25ம் ஆண்டு, 1.50 கோடி டன் நெல் கொள் முதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதால் பாராட்டினோம் . தமிழக முதல்வரும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பட்சத்தில், அவரையும் பாராட்ட தயாராக உள்ளோம்" என்று தெரிவித்தார்கள்.
English Summary
Tamil Nadu farmers who gifted Mukani and praise the Chhattisgarh Chief Minister