தமிழகத்திலுமா இப்படி நடக்கிறது? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வியப்பு.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்ற பொறியியல் மாணவர் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் ஆட்கள் மாணவர் கோகுல்ராஜை கொலை செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து, யுவராஜ் உட்பட 17 பேரை திருச்செங்கோடு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கின் விசாரணை காவல்துறையினர் மூலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் விசாரணையை முடிக்க ஆறு மாதம் அவகாசம் கேட்டு தமிழக காவல் துறை சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும், யுவராஜ் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தமிழ்நாட்டிலும் ஆணவக்கொலைகள் நடக்கிறதா? என ஆச்சரியத்துடன் கேட்டார்.

உத்திரப் பிரதேசம் மற்றும் ஹரியானாவில் தான் இதுபோன்ற ஆணவக்கொலைகள் அதிகமாக நடக்கிறது, என்று நாங்கள் நினைத்தோம்,என தெரிவித்த தலைமை நீதிபதி தமிழக காவல்துறைக்கு இந்த வழக்கை விசாரித்து முடிக்க ஆறு மாத காலம் அவகாசம் வழங்கினார், அதேவேளையில் குற்றவாளியாக கருதப்படும் யுவராஜ் உள்ளிட்டோருக்கு ஜாமீன் கிடையாது, என்று வாய்மொழியாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme court judge shock about tamilnadu 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->