கடும் நடவடிக்கை எடுக்கப்படும்... "கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது".. மாநில கல்வித்துறை சுற்றறிக்கை..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாநில பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளி வகுப்புகளுக்கும் ஆண்டு தேர்வானது நடைபெற்று தற்போது முடிவடைந்துள்ளது. மாநில கல்வி கொள்கையின் படி  1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் கட்டாய தேர்ச்சியின் அடிப்படையில் தேர்ச்சி பெறுவார்கள்.

ஆனால் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஆண்டு தேர்வின் முடிவின் அடிப்படையிலேயே அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெற்று செல்வர். சில தனியார் பள்ளிகள் ஆண்டு தேர்வு முடிவுக்கு பின்னர் மாணவர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் சில தனியார் பள்ளிகள் இவ்வாறு நடந்து கொள்வதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் புதுச்சேரி மாநில கல்வித்துறை அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் "புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை கட்டாயப்படுத்தி பள்ளியிலிருந்து வெளியேற்றக் கூடாது.

மாணவர்களுக்கு செயல் திறன் குறைந்து இருப்பதாக கூறி கட்டாயப்படுத்தி மாற்று சான்றிதழ்களை வழங்கக் கூடாது. அவ்வாறு கட்டாயப்படுத்தி மாற்று சான்றிதழ் வழங்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என மாநில பள்ளி கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

State Education Dept circular students should not be forced out


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->