முன்கூட்டியே தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை.. இந்திய வானிலை ஆய்வு மையம்.!
Southwest monsoon season starts in May 23
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் தென் மாநிலங்கள் மட்டுமின்றி வட மாநிலங்களிலும் அதிக மழை பெய்யும்.
அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி தென்படும். இந்திய வானிலை ஆய்வு மையம் இதனை கண்டித்து தென்மேற்கு பருவமழை தொடங்கும் அதை அறிவிக்கும்.

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அந்தமான் தீவுகளில் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிவதாக தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வருகின்ற மே 27ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தற்போது பருவநிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இருபத்தி ஏழாம் தேதிக்கு முன்னரே அதாவது மே23ம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கிவிடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டால் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் அதிக மழை பெய்யும். குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.
English Summary
Southwest monsoon season starts in May 23