தற்போதைய மழை வெள்ளத்தின் பலி எண்ணிக்கை தெரியுமா?.! ஆயிரக்கணக்கில் உயிர் சேதம்., லட்சக்கணக்கில் வீடுகள்..!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கேரள மாநிலத்தில் கடந்த ஜூன் மாதத்தின் 8 ஆம் தேதியன்று தென்மேற்கு பேருவளை துவங்கிய நிலையில்., தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இந்தியா முழுவதிலும் பரவலாக பெய்து வந்தது. இந்த தென்மேற்கு பருவமழை கடந்த 30 ஆம் தேதியோடு அதிகாரபூர்வமாக நிறைவடைந்த நிலையில்., சில பகுதியில் விடாமல் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. 

இந்த நிலையில்., இம்மழையானது கடந்த ஆண்டினை விட அதிகளவு பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையமானது தெரிவித்துள்ள நிலையில்., கடந்த 1994 ஆம் வருடத்திற்கு பின்னர் தற்போது அதிகளவு மழை பெய்துள்ளதாகவும்., தற்போது பெய்துள்ள மழை இயல்பான மழைக்கு மேல் வகையில் வகைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

rain seithipunal,

இந்த தருணத்தில்., தென்மேற்கு பருவமழையானது அதிகளவு சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்., கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு., நிலச்சரிவு போன்ற காரணத்தால் சுமார் 1874 பேர் பலியாகியுள்ளதாகவும்., சுமார் 738 பேர் காயமடைந்துள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகமாகமானது தெரிவித்துள்ளது. மேலும்., இந்த விபத்துகளால் சுமார் 46 பேர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

இம்மழை வெள்ளத்தின் காரணமாக சுமார் 1.09 இலட்சம் வீடுகள் இடிந்துள்ளதாகவும்., 2.05 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும்., 14.14 ஹெக்டேர் அளவிலான பயிர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 382 பேரும்., மேற்கு வங்கத்தில் 227 பேரும்., மத்திய பிரதேசத்தில் 182 பேரும்., கேரளாவில் 181 பேரும்., குஜராத்தில் 169 பேரும் பலியாகியுள்ளதாகவும்., சுமார் 357 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

south west Manson peoples died quantity over all india


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->