வாடகை செலுத்தாத சோனியா காந்தி! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வீட்டிற்கும், காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கும் வாடகை செலுத்தப்படாமல் இருப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் அளித்துள்ள பதிலில், தலைநகர் புதுடெல்லியில் ஜன்பத் சாலையில் அமைந்துள்ள சோனியா காந்தி வீட்டிற்கும், அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கும் வாடகை செலுத்தவில்லை என தெரிவித்துள்ளது.

சமூக ஆர்வலர் சுஜித் படேல் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்ட கேள்விக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் இவ்வாறு பதில் அளித்துள்ளது.

மேலும் அந்த பதிலில், எண், 10,  ஜன்பத் சாலையில் சோனியா காந்தி வசிக்கும் வீட்டிற்கு ரூ.4,610 வாடகை பாக்கி உள்ளது என்றும், அக்பர் சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு ரூ.12,69,902 வாடகை பாக்கி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோனியா காந்தியின் தனிச்செயலாளரான, வீணா ஜார்ஜ் கடைசியாக 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வாடகை செலுத்தியுள்ளார் எனவும், அவர் அரசிற்கு ரூ.5,07,911 பாக்கி வைத்துள்ளார் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கிப்பட்டுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம், லோதி சாலையில் அரசுக்கு சொந்தமான வீட்டில் குடியிருந்து வந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு, வீட்டை காலி செய்யும்படி மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sonia Gandhi House Rental


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->