இதுவரை திரும்ப பெறப்பட்ட ரூ.2,000 நோட்டுகள் எவ்வளவு? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


நாட்டில் புழக்கத்தில் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ம் தேதிக்குள் அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் 19ம் தேதி அறிவித்தது.

இதனையடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஜூன் 30ம் தேதி வரை 2.72 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதில் 87 சதவீதம் டெபாசிட் மூலமாகவும், 13 சதவீதம் மற்ற மதிப்பு நோட்டுகளாக மாற்றப்பட்டதன் மூலமாக திரும்ப பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளில் இதுவரை 76 சதவீத நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இன்னும் மூன்று மாதங்கள் அவகாசம் உள்ளது. அதனை பயன்படுத்தி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதுடன், கடைசிநேர பரபரப்பை மக்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

So far 76 percent of Rs 2000 notes have been recovered RBI notification


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->