ஆந்திராவில் அதிர்ச்சி!!! மனைவியை கயிற்றில் கட்டி அடித்த கொடூர கணவன் வீடியோ வைரல்...!
Shock Andhra Pradesh Video brutal husband tying his wife rope and beating her goes viral
ஆந்திரப் பிரதேசம், பிரகாசம் மாவட்டம் கலுஜுவலபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் 'குருநத்தம்'. இவரது மனைவி லட்சுமியையும் 4 குழந்தைகளையும் விட்டு, ஐதராபாத் நகரில் வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். இதனால் லட்சுமி, கிராமத்தில் தனியாகவே பேக்கரியில் வேலை செய்து குழந்தைகளை வளர்த்து வருகிறார்.

அவ்வப்போது கிராமத்துக்கு வருகிற குருநத்தம், மனைவியிடமே செலவுக்காக பணம் கேட்டு செல்வது வழக்கமாக இருந்தது. இந்த முறை அவர் கொடூரத்துக்கு தள்ளப்பட்டார்.
இவர் மனைவியை கயிற்றால் கட்டி நிற்க வைத்து, தன் பெல்ட்டை கழற்றி அடித்ததோடு மட்டுமின்றி, கால்களாலும் உதைத்தார். இதனால், வலி தாங்காமல் அலறிய லட்சுமியின் சத்தம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்தது.அந்த நேரத்தில் அண்டை வீட்டுக்காரர்கள் உதவிக்கு ஓடி வந்தனர்.
அவர்களே இந்த கொடூர சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால், பெரும் கண்டனங்கள் கிளம்பி வருகின்றன.மேலும், செலவுக்கு பணம் தர மறுத்ததற்காகவே மனைவியை அடித்ததாகக் தெரிவிக்கப்படுகிறது. இந்த பரபரப்பான சம்பவம் குறித்து தற்போது காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Shock Andhra Pradesh Video brutal husband tying his wife rope and beating her goes viral