சிவசேனா தலைவர் சுதீர் சூரி துப்பாக்கி சூட்டில் பலி! அமிர்தசரஸ்ஸில் பதற்றம்! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநில சிவசேனா தலைவர் சுதீர் சூரி அடையாளம் தெரியாத நபர்களால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அமிர்தசரஸ் நகரில் உள்ள கோபால் மந்திர் கோயிலுக்குச் சென்ற அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு உள்ளனர்.

கோபால் மந்திர் கோவிலுக்கு வெளியே உள்ள குப்பை தொட்டியில் சாமி சிலைகள் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து அறிந்த சூரி தமது ஆதரவாளர்களுடன் கோவில் அதிகாரிகளுக்கு எதிராக கோவில் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த போராட்டத்தில் ஆதரவாளர் போல் கலந்து கொண்ட மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சூரியை சுட்டுள்ளார்.

துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சூரி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் குற்றவாளியை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்தான விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தலைப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

இதே போன்று பஞ்சாப் மாநிலத்தில் திப்பா சாலை கிரேவால் காலனியில் உள்ள சிவசேனா தலைவர் அஸ்வனி சோப்ராவின் வீட்டின் அருகே சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் மாநிலத்தில் சிவசேன தலைவர்களை குறி வைத்து இரு வேறு இடங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டால் பதட்டமான சூழல் உண்டாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ShivSena leader Sudhir Suri killed in firing in Amritsar


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->