செபி தலைவர் மாதபி புச் விவகாரம்...ஐசிஐசிஐ நிர்வாகம் விளக்கம்! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் ஹிண்டன்பர்க்  நிறுவனம் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்ட அறிக்கையில், வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை உருவாக்கிய அதானி குழுமம், பலநூறு கோடி ரூபாய் ரகசிய பரிவர்த்தனையில் ஈடுபட்டு பங்குச்சந்தையில் ஊழல் செய்ததாக ஆதாரங்களை வெளியிட்டது.

மேலும் அதானியின் போலி நிறுவனம் என்று குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனத்தில் செபியின் தலைவராக இருக்கும் மாதவிக்கும்,  அவரது கணவருக்கும் பங்குகள் இருந்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம்  வெளியிட்டிருந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  

இதற்கிடையே  மாதபி புரி புச், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியிடம் இருந்து ரூ.16.8 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றிருப்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா நேற்று குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில் செபி தலைவர் மாதபி புச், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் இருந்து கடந்த 2013 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றதாக அவ்வங்கி நிர்வாகம் அளித்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஓய்வுகால பலன்களை தவிர அவருக்கு ஊதியமோ, இ.எஸ்.ஐ.பி. பலனையோ ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அல்லது ஐ.சி.ஐ.சி.ஐ. குழும நிறுவனங்கள் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில்,  காங்கிரஸ் கட்சியின் இந்த குற்றச்சாட்டுக்கு மாதபி புச் தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SEBI Chairman Madhabi Buch matter ICICI management explanation


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->