பாஜகவுக்கு மட்டும் 2 ஓட்டு விழுதே.. உடனே விசாரிங்க.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


கேரளாவில் காசர்கோடு பகுதியில் மாதிரி வாக்குப்பதிவின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகை சீட்டு எந்திரம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்கும்போது ஒரு வாக்கு பாஜகவுக்கு கூடுதலாக விழுந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மலையாள செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்ட நிலையில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்குமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஒப்புகைச் சீட்டு எந்திரம் எப்படி எல்லாம் செயல்படுகிறது? அதில் முறைகேடுகளில் ஈடுபட முடியுமா? என்ன மாதிரியான தொழில்நுட்பம் செயல்படுத்தப்படுகிறது ?

எந்தெந்த அதிகாரிகள் எல்லாம் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் ? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி வரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இது தொடர்பான பதிலளிக்குமாறு தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sc ordered to ECI investigate Kerala voting machine issue voting machine issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->