சவுக்கு சங்கரின் மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் பிரபல யுடியூபரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீதிபதிகள் மற்றும் நீதித்துறை மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதனை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. 

இந்த விசாரணையில் ஆஜரான சவுக்கு சங்கர் தான் தெரிவித்த கருத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்தார். இதன் காரணமாக சவுக்கு சங்கருக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனை விதித்து சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அமர்வு உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அங்கு அவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதி பின்னர் கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். 

கடலூர் மத்திய சிறைக்கு அவர் சார்பாக அதிகமானோர் பார்வையாளராக வர தொடங்கிய நிலையில் கடலூர் சிறைத்துறை அதிகாரிகள் சவுக்கு சங்கரை சந்திக்க தடை விதித்தனர். இதனை எதிர்த்து சாவுக்கு சங்கர் உண்ணாவிரதம் இருந்ததால் அவரின் உடல்நிலை மிகவும் மோசமானது. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சவுக்கு சங்கரின் தாயார் கடிதம் மூலம் தனது மகனை சந்திக்க அனுமதிக்குமாறும் அவர் உயிருக்கு ஆபத்து இருப்பதால் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த சிறை தண்டனையை எதிர்த்து சவுக்கு சங்கர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்கை உச்சநீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது. அதன்படி சவுக்கு சங்கரின் மேல்முறையீடு மனு நீதிபதிகள் சஞ்சய் கண்ணா மற்றும் ஜே.கே மகேஸ்வரி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Savukku Shankar appeal heard in the Supreme Court


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->