நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரியது மகிழ்ச்சி - சாய்னா நேவால்.!! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி சாலை வழியாக காரில் சென்றார். அவருடன் பாதுகாப்பு வாகனங்களும் அணிவகுத்து சென்றது. ஆனால், வழியில் உள்ள ஒரு மேம்பாலத்தில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், பிரதமர் கார் நிறுத்தப்பட்டது. 20 நிமிடம் காத்திருந்த நிலையில் மாற்றமில்லை. இதனால் பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து திரும்பினார். அவரது நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. 

இதையடுத்து, பிரதமரின் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே சாய்னா நேவால் தனது ட்வீட்டர் பக்கத்தில், எந்த நாட்டின் பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னை பாதுகாப்பாக இருப்பதாக கூறிக் கொள்ள முடியாது. பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 

இந்த கருத்துக்கு பதில் அளித்து நடிகர் சித்தார்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவு, பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. சித்தார்த்தின் பதிவிற்கு பல தரப்பிலிருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த்  மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீங்கள் பதிவிட்ட டுவிட்டிற்கு பதிலாக நான் பதிவிட்ட மூர்க்கத்தனமான டுவிட்டிற்கு பதிவிற்கு மன்னிப்பு கோருகிறேன் என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரியது மகிழ்ச்சி அளிக்கிறது என பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்துள்ளார். உங்கள் விமர்சனத்தை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு பெண்ணை இவ்வாறு குறிவைத்து தாக்கக் கூடாது என சாய்னா தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

saina nehwal happy to actor siddharth apology


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->