இந்தியாவிற்கு  'எஸ்-400' ஏவுகணையின் மூன்றாவது தொகுப்பு விரைவில் அனுப்பப்படும் - ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ்.! - Seithipunal
Seithipunal


இந்தியா கடந்த 2018-ம் ஆண்டு ரஷியாவிடம் இருந்து ஐந்து பில்லியன் டாலர் மதிப்பில் 'எஸ்-400' வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளின் ஐந்து தொகுப்புகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 

மேலும், எதிர்ப்பை மீறி இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தினால் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிகை விடுத்துள்ளது. இருப்பினும் இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கு இந்தியாவும், ரஷியாவும் முடிவு செய்துள்ளன. 

அதன்படி, ரஷியா 'எஸ்-400' ஏவுகணை அமைப்புகளின் முதல் தொகுப்பை கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதமும், இரண்டாவது தொகுப்பை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமும் இந்தியாவுக்கு வழங்கியது. 

இந்த நிலையில் இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தப்போது தெரிவித்ததாவது, "இந்தியாவும், ரஷியாவும் ஒப்பந்தத்தில் உறுதியாக இருப்பதால், இந்தியாவுக்கு ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 வான்பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் மூன்றாவது தொகுப்பு விரைவில் வழங்கப்படும். 

இரு தரப்பினரும் தங்களுடைய முழு ஒப்பந்தத்தையும் முடிப்பதற்கு உறுதி எடுத்துள்ளோம். அதை யாரும் தடுக்க முடியாது. ஏற்கனவே ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை அமைப்பின் இரண்டு தொகுப்புகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு உள்ளன. 

மீதமுள்ள எஸ்-400 ஏவுகணை அமைப்பின் தொகுப்புகள் விரைவில் சப்ளை செய்யப்படும். மேலும், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா தூதரக ரீதியில் நடவடிக்கை மேற்கொண்டால், எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் ரஷியா தயாராக இருக்கும்" என்றுத் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

S 400 missile system supply to india soon russiya envoy tenis alibov press meet


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->