ஆர்எஸ்எஸ் அமைப்பு 100 ஆண்டு நிறைவு! ரூ.100 சிறப்பு நாணயம் வெளியிட்ட பிரதமர் மோடி!
RSS 100 rs pm modi
நாளை ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது 100 ஆண்டு விழாவை நிறைவு செய்யிறது. இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் அமைப்பால் நடத்தப்படுகின்றன.
டெல்லியில் நூற்றாண்டு கொண்டாட்டத்தையொட்டி, பிரதமர் மோடி சிறப்பு ரூ. 100 நாணயம் மற்றும் அஞ்சல் தலையை வெளியிட்டார். இந்த விழாவில் அவர் பேசியபோது, ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் ஆங்கிலேய ஆட்சியின் கொடுமைகளுக்கு எதிராக கடுமையாக போராடியதை நினைவுகூர்த்தார். சுதந்திரப் போராட்ட காலத்தில், அமைப்பின் நிறுவனர் கே.பி. ஹெட்கேவ் உட்பட பல ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நூற்றாண்டு கொண்டாட்டம், ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்று பங்களிப்பையும், சுதந்திரப் போராட்டத்தில் அதன் உறுப்பினர்களின் துணிவையும் நினைவுகூரும் விழாவாக அமைந்துள்ளது.